Wednesday, September 10, 2008

தின மலத்தை புறக்கனிப்போம்.

நமது கண் மணி ரசூலே கறீம் {ஸல்} அவர்களை கேலி சித்திரம் வரைந்து இஸ்லாமியர்களின் மனங்களை புண்பட செய்த தினமலம் நாளிதழை உறுதியுடன் புறக்கணிப்போம்.மேலும் இனிமேல் தினமலம் என்றே அழைப்போம்.
அன்புடன்,
அன்சாரி.

Monday, September 8, 2008

வெற்றி நமதே.

அன்புள்ளங்களே!
அஸ்ஸலாமுஅலக்கும்
நம் பணி கடல் போன்றது,இஸ்லாமிய உலகு என்பது இஸ்லாத்தை பின்பற்றி வாழுகின்ற முஸ்லிம்கள் ஒரு உலகை உள்ளடக்கியதாகும். அவ்வித முஸ்லிம்,இஸ்லாமிய ஆட்சி நடைபெறும் நாடுகளையும் மற்றைய ஆட்சி நடைபெறும் நாடுகளில் உள்ள முஸ்லிம்களையும் உள்ளடக்கும்.

ஷரியத்தையும்,நாட்டுச்சட்டத்தையும் இணைந்து செல்கின்ற சட்டங்களையும்,முரண்பட்ட சட்டக்கருத்துக்களையும்,இன்றய தாக்குதலுக்கு உள்ளான இஸ்லாமிய சட்டக்கருத்துக்களையும் பற்றி நாமும் நன்கு தெரிந்து கொள்வதோடு நம் சமுதாயத்திற்கும் மற்றவர்களுக்கும் தெரிவிக்க வேண்டும்.
ஜமாத்துக்கள் தோறும் முதற் கட்டமாக ஷரியத் சமரச ஆலோசனை மையம் அமைத்து நம் சமுதாயம் வீணில் கோடேறிக் குடிகெடுக்கும் படலத்திற்கு முற்றுப்புள்ளி வைப்போம்,விரைந்து பதியுங்கள் தங்கள் மேலான கருத்துக்களை.
செயல்படுவோம்- வெற்றி நமதே!

ஒற்றுமை.

அன்புள்ள சகோ.அனைவர்களுக்கும்
அஸ்ஸலாமுஅலைக்கும்,
நாம் புனிதமிகு ரமளானில் உள்ளோம் நாம் ஒற்றுமை என்னும் கயிற்றை பற்றி பிடித்தால் மட்டுமே வெற்றி பெற முடியும்,இல்லையேல் நாமே அல்லாஹ்வின் கட்டளையை மீறியதாகிவிடும். சமுதாய தலைவர்கள், ஐமாத் தலைவர்கள் முயற்ச்சி மேற்கொண்டு ஆங்காங்கு உள்ள சிறு சிறு பிரச்சனைகளை களைந்து நமது சமுதாயத்தை ஒரு குடையின் கீழ் கொண்டு வர வேண்டும்.நாம் அதற்கு துஆ செய்வதோடு தக்க முயற்ச்சியிலும் இடுபட வேண்டும். புனித ரமளானில் அதை செய்யவோமா?
அன்புடன்,
அன்சாரி.